தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி முத்துதேவன்பட்டியில் உள்ள வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்,வி.ஷஜீவனா இ.ஆ.ப அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணக்குமார் (பெரியகுளம்) மகாராஜன் (ஆண்டிபட்டி) ராமகிருஷ்ணன் (கம்பம்) ஆகியோர் முன்னிலையில் மகளிர்களுக்கு வங்கி பந்து அட்டைகளை இன்று வழங்கினார்கள்.உடன் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி, அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.