தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வனஉயிரின வார விழா-2023 முன்னிட்டு வன உயிரின வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெரியகுளம் தென்கரை திருவள்ளுவர் சிலையில் ஆரம்பித்து பெரியகுளம் வடகரை பழைய பேருந்து நிலையம் வரை பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு ஊரவலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு பேரணியை பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.உதவி வன பாதுகாவலர் சக்திவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட் ராஜன் முன்னிலை வகித்தார். பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தென்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுல்தான் பாஷா பெரியகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தேவதானப்பட்டி வனச்சராக வனவர், வனக்காப்பாளர்கள், பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், என்.ஆர்.தியாகராஜன் கல்லூரி நர்சிங் மாணவிகள், போடி ஏல விவசாய சங்க கல்லூரி மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் பெருமக்கள், உட்பட 500க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.