
திருச்சி: மருங்காபுரி வளநாடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மனைவி கல்யாணி. இருவருக்கும் கடந்த ஆண்டு நவ., 8ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கல்யாணி நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். திருமணமாகி வெறும் 3 மாதமே ஆவதால் இதுகுறித்து ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டார்.