மாவட்ட திட்டக்குழு கூட்டம் ஆனது இன்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்,வி.ஷஜீவனா இ.ஆ.ப அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு மற்றும் திட்ட குழுத் தலைவர் க.ப்ரிதா அவர்கள் தலைமையில் திட்டக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 9 தலைப்பின்கீழ் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பிரகாஷ், மாவட்ட ஊராட்சி செயலாளர் திட்ட அலுவலர் சிவக்குமார், உதவி இயக்குநர் அண்ணாத்துரை, மற்றும் நகர்மன்றத் தலைவர்கள், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.