தேனி மாவட்டம் சின்னமனூரில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக சார்பில் தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பிச்சைக்கனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ் டி கே ஜக்கையன், முன்னாள் எம்பி பார்த்திபன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா , தலைமை கழக பேச்சாளர் மதுரை பாரதியன் , முருக்கோடை ராமர் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் டி.டி.சிவக்குமார் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சதகத்துல்லா மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாலமணிமார்பன், மனோகரன் ,கண்ணன் , இளநீர்ராமர் , மதிவாணன் உள்ளிட்ட மாநில, மாவட்ட , ஒன்றிய ,பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆண்களும் பெண்களுமாக திரளாக கலந்து கொண்டனர்.
பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு அனைவரும் கண்டுகளித்தனர்.