சர்தார் வல்லபாய் பட்டேலில் பிறந்த நாளை ஒட்டி தமிழகத்தைச் சேர்ந்த எட்டு போலீஸ் அதிகாரிகளுக்கும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 463 போலீஸ் அதிகாரிகளுக்கும் கேந்திரிய க்ரிஹ்மந்த்திரி தக் ஷதா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி போலீஸ் அதிகாரிகளுக்கான கேந்திரிய க்ரிஹ்மந்த்திரி தக் ஷதா பதக்கம் ஆண்டுதோறும் மத்திய அரசால் அறிவிக்கப்படுகிறது.
வழக்குகளுக்கான அமைக்கப்படும் சிறப்பு படைப் பிரிவில் குறிப்பிடத்தகுந்த சாதனை செய்தவர்கள் சிறப்பாக விசாரணை நடத்தியவர்கள் தடையவியல் துறையில் தனித்துவமான சேவை ஆற்றியவர்களுக்கு இந்த பதக்கம் வழங்கப்படுகிறது
இந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பதக்கம் நேற்று அறிவிக்கப்பட்டன மத்திய ஆயுதப்படை போலீஸ், மத்திய போலீஸ் அமைப்புகள் மற்றும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 463 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டது
இதில் தமிழகத்தைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர் தமிழகத்தில் இருந்து எஸ் பி வந்திதாபாண்டே, எஸ்.பி., கே. மீனா, உதவி ஆணையர்கள் சி. கார்த்திகேயன், சி. நல்லசிவம், ஆய்வாளர்கள் எம். அம்பிகா, என். உதயகுமார், எஸ். பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு பதக்கம் அறிவிக்கப் பட்டுள்ளது. தடயவியல் துறையில் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த துணை இயக்குனர் சுரேஷ் நந்தகோபாலுக்கும் பதக்கம் அறிவிக்கப் பட்டுள்ளது.
Madurai District Reporter Arul Jothi