மின்வாரிய ஊழியர்களுடன் கைகோர்த்து பணி செய்து கொண்டிருக்கும் கிராம இளைஞர்கள்!!!
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. இது சம்பந்தமாக மின்வாரியத்திற்கு அளித்த புகாரின் அடிப்படையில் மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இரவு நேரம் எனக் கூட பார்க்காமல் ஆனந்தூர் இளைஞர்கள் உதவியோடு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேரம் என கூட பாராமல் தன்னுயிரை துச்சமென எண்ணி பணி செய்து கொண்டிருக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கு ராயல் சல்யூட்.
ஊழியர்களோடு கைகோர்த்த ஊர் இளைஞர்களுக்கு பொதுமக்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்