இந்தியாவில் கடந்த 1901ம் ஆண்டுக்கு பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையின் அளவு இந்த ஆண்டு 36% குறைவாக பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இந்த நூற்றாண்டில், ஆகஸ்ட் மாதத்தில் 30%க்கும் மேல் குறைவாக மழை பெய்திருப்பது இதுவே முதல் முறை என்றும் எல்-நினோ எனப்படும் காலநிலை நிகழ்வு, இந்த பருவநிலை மாற்றத்துக்கு காரணம் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.