இதில் செப்.18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கும், புதிய நாடாமன்ற கட்டிடத்திற்கும் பல மாற்றங்கள் செய்யபட்டுள்ளது. அதன் தொடர்ச்சிய புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பணியாற்றும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு புதிய டிரஸ்கோட் மற்றும் சீருடை அறிமுகம் செய்யபட்டுள்ளது.
அதன்படி ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கபட்டுள்ளன. இதற்கு முன்னதாக ஆண் பணியாளர்களுக்கு சபாரி சூட் போன்ற உடை வழங்கபட்டுவந்த நிலையில், தற்போது அவர்களுகு லேசான காவி நிறத்திலான சட்டையும், அதற்கு மேல் அணிய கூடிய கோர்ட்டும், காக்கி நிறத்தினாலான கால் சட்டையும் வழங்கபட்டுள்ளது. அதே போல் ஆண்கள் அணிய கூடிய சீருடையில் சிறிய அளவிலான தாமரை பூக்கள் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் பணியாற்ற கூடிய மார்ஷல் என்று அழைக்கக்கூடிய காவலர்களுக்கு இதற்கு முன்னதாக வெள்ளை நிறத்தால் ஆன சபாரி சூட் போன்ற சீருடை வழங்கபட்டு வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு குர்தா மற்றும் பைஜாமா போன்ற உடைகள் சீருடையாக வழங்கபட்டுள்ளது. அதே போல இரு அவைகளிலும் பணியாற்ற கூடிய பணியாளர்களுக்கு அவர்களது சீருடையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது
இதே போல நாடாளுமன்றதில் பணியாற்ற கூடிய பல்வேறு வகைகளை சேர்ந்த பணியாளர்களுக்கும் சீருடையில் மாற்றம் செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பணியாற்ற கூடிய சுமார் 275 பணியாளர்களுக்கும் ஏற்கனவே இந்த சீருடை வழங்கபட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது