அதானியை பற்றி பேச மாட்டேன், பாஜக உறுப்பினர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை; ஒற்றுமை நடைபயணம் நிறைவடையவில்லை தொடரும்.
பிரதமர் நரேந்திர மோடி விரும்பினால் சிறை செல்லவும் தயார்.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக என்னை அவதூறாக விமர்சித்து வருகிறது.
ஒற்றுமை நடைபயணத்தின்போது அனைத்து தரப்பு மக்களின் குரல்களையும் கேட்டேன்.
நான் இன்று பேச தொடங்கியவுடன் வெறுப்புடன் சிலர் பேசத் தொடங்கினார்கள்.
இந்த வெறுப்புணர்வை நீக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
ஒற்றுமை யாத்திரையின் மூலமாக நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
உண்மையான இந்தியாவை அந்த பயனத்தின் வழியாக நான் பார்த்தேன்.
நான் மணிப்பூருக்கு நேரில் சென்றேன், ஆனால் பிரதமர் இதுவரை செல்லவில்லை.
அவரைப் பொறுத்தவரை மணிப்பூர், இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை.
பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தை கைவிட்டு விட்டார்.
தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூர் இன்று பிரிந்து நிற்கிறது.
மணிப்பூர் பெண்கள் வலியை பாஜக அரசு உணரவில்லை; மணிப்பூரை மட்டுமல்ல, நாட்டையே மத்திய அரசு கொலை செய்துவிட்டது.
பாஜகவினர் பாரதமாதாவின் காவலர்கள் அல்ல, மாறாக அவளை கொலை செய்த கொலைகாரர்கள்.