அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டவை குறித்த தகவலை வெளியிட்டது அமலாக்கத்துறை.
கரூர் மற்றும் கோவையில் ஆகஸ்ட் 3ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடைபெற்றது.
அதில் ரூ22 லட்சம் பணமும், ரூ16.6 லட்சம் மதிப்புடைய கணக்கில் வராத விலை உயர்ந்த பொருட்களும், 60 நில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
பின்னர் அமலாக்கத்துறையால் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 3ம் தேதி அவருக்கு சொந்தமான கரூர் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை மேற்கொண்டது. இந்த சோதனை நேற்று மதியம் நிறைவு பெற்ற நிலையில் இன்று சோதனையில் கைப்பற்றப்பட்டவை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரபூர்வ தகவலளித்துள்ளது.
அதில், ரூ22 லட்சம் பணமும், ரூ16.6 லட்சம் மதிப்புடைய கணக்கில் வராத விலை உயர்ந்த பொருட்களும், 60 நில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.