விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆகின.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எம் கே எஸ் பெட்ரோல் பங்க் அருகில் முத்துராமலிங்க குமார் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை செயல்பட்டு வருகிறது.
இன்று காலை வழக்கம்போல் கடை திறப்பதற்காக உரிமையாளர் முத்துராமலிங்க குமார் என்பவர் சென்றுள்ளார் அப்போது கடைக்குள் புகை மூட்டமாக காணப்பட்டு தீ எரிந்து கொண்டு இருந்துள்ளது.
இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று பழைய இரும்பு கடையில் பயங்கரமாக தீ எரிந்து கொண்டிருந்ததை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராடி அணைத்தனர்.
தீயில் கருகி சேதம்
மேலும் கடையில் இருந்த சுமார் பத்து லட்சம் மதிப்பிலான பழைய நோட்டு புத்தகங்கள் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பழைய இரும்பு பொருட்கள் முற்றிலுமாக தீயில் கருகி சேதமடைந்தன.
மின் கசிவு காரணமா?
மேலும் இந்த தீ விபத்தானது மின் கசிவு காரணமா இல்லை வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.