தூத்துக்குடி பனியமய மாதா கோவில் திருவிழா

தூத்துக்குடி பனியமய மாதா கோவில் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் : 27.07.2023

தூத்துக்குடி பனியமய மாதா கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூராக சாலையோரங்களில் ஆங்காங்கே நிறுத்தாமல் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு மாவட்ட காவல்துறை சார்பாக 10 இடங்களில் வாகன நிறுத்தும் (Parking) வசதி செய்யப்பட்டுள்ளது எனவும், அவற்றை அனைவரும் பயன்படுத்தி காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 16வது தங்கத்தேர் திருவிழா நேற்று (26.07.2023) கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 05.08.2023 வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்களான 29.07.2023, 30.07.2023, 03.08.2023, 04.08.2023 மற்றும் 05.08.2023 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக 10 இடங்களில் வாகன நிறுத்தும் (Parking) வசதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதன்படி 1. வ.உ.சி சாலை வழியாக வரும் வாகனங்கள்

தூத்துக்குடி வ.உ.சி (WGC ரோடு) சாலை வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் பழைய முனிசிபல் ஆபீஸ் ஜங்ஷன், வடக்கு காட்டன் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக சென்று புனித பிரான்ஸிஸ் சேவியர் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பிரெஞ்சு சேப்பல் தெரு வழியாக சென்று சின்னக்கோவில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தவும் மேலும்,

தூத்துக்குடி வ.உ.சி (WGC ரோடு) சாலை வழியாக பழைய முனிசிபல் ஆபீஸ் ஜங்ஷன், Fire Service ஜங்ஷன், தெற்கு காட்டன் ரோடு வழியாக சென்று St.பீட்டர் கோவில் தெருவிலுள்ள லசால் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், தெற்கு காட்டன் ரோடு, PPMT ஜங்ஷன் வழியாக சென்று ஜார்ஜ் ரோட்டிலுள்ள சால்ட் ஆபீஸ் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், தருவை மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், PPMT ஜங்ஷன் வழியாக சென்று லயன்ஸ் டவுணிலுள்ள காரப்பேட்டை ஆண்கள் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தவும்,

2. வடக்கு கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள்

தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலை வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் வடக்கு கடற்கரை சாலையிலுள்ள கால்டுவெல் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலையிலுள்ள முத்துநகர் கடற்கரையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலையிலுள்ள துறைமுகம் சமுதாய நலக்கூடம் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலை, இந்திரா காந்தி சிலை சந்திப்பு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பிரெஞ்சு சேப்பல் தெரு வழியாக சென்று சின்னக்கோவில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தவும்,

3. தெற்கு கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள்

தெற்கு கடற்கரை வழியாக மாதா கோவில் வரும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மீன்பிடி துறைமுகம் வளாகத்தில் நிறுத்தவும். மீன்பிடி துறைமுகத்திற்கு வடக்கே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

4. ஜார்ஜ் ரோடு வழியாக வரும் வாகனங்கள்

ஜார்ஜ் ரோடு வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் ஜார்ஜ் ரோட்டிலுள்ள தருவை மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், PPMT ஜங்ஷன் வழியாக சென்று ஜார்ஜ் ரோட்டிலுள்ள சால்ட் ஆபீஸ் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், PPMT ஜங்ஷன், தெற்கு காட்டன் ரோடு வழியாக சென்று St.பீட்டர் கோவில் தெருவிலுள்ள லசால் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், PPMT ஜங்ஷன் வழியாக சென்று லயன்ஸ் டவுணிலுள்ள காரப்பேட்டை ஆண்கள் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே திருவிழாவிற்கு வருகைதரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தாமல், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் (Parking) நிறுத்தி காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.