கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, மது போதையில் ஆசிரியரை கொலை செய்து விட்டு 14 ஆண்டுகாலமாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சிகரலப் பள்ளி பகுதியைச் சேர்ந்த பெரியதுரை இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில் பர்கூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அன்சர்(44), பாலன் (36) ஆகியோருடன் நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த 25.7.2009ம் தேதி ஜெகதேவி பாலமுருகன் கோயில் அருகில், மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, பெரியதுரை பையில் இருந்து ₹2 ஆயிரத்தை மற்ற இருவ ரும் எடுத்ததால் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த இருவ ரும் சேர்ந்து, பெரியதுரை கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.இந்த வழக்கில் பாலன் கைது செய்யப்பட்ட நிலையில், அன்சர் தலைமறை வானார். அவரை கடந்த 14 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலை யில், கடந்த ஒரு மாதத் திற்கு முன்பு பர்கூர் இன்ஸ்பெக்டர் வளர்மதி அவர்கள் குற்றவழக்கு பட்டியலை சரிபார்த்த போது, 14 ஆண்டுகளாக அன்சர் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. *இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் எஸ்.எஸ்.ஐ. பிரான்சிஸ், முதல் நிலை காவலர் ஆதிநாதன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.இதில், அன்சர் ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் கர் நாடகமாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தங்கி வேலை பார்த்தது தெரிந்தது. மேலும், தனக்கு வேண்டியவர்களை பார்த்து பேசி, குடும்பத் திற்கு பணமும் கொடுத்து சென்றதும் தெரிந்தது. தற் போது அன்சர் கர்நாடகாவில் கூலி வேலை பார்ப்பதும், ஜூஜூவாடி யில் சிலரை சந்திக்க வந்திருப்பதையும் தெரிந்து கொண்ட பர்கூர் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார். அன்சரை ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்……
பருகூர் நிருபர் R.இளவரசன்