காலை 08.00 மணிக்கு சேலம் மாநகர காவல் துறை மற்றும் “SPARKLIN STARZ” என்ற தனியார் நிறுவனமும் இணைந்து “பெண்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெண்கள் மட்டும் கலந்து கொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது”. இந்த பேரணியில் சேலம் மாநகர காவல் துறையில் பணிபுரியும் மகளிர் காவல் பிரிவினர், தன்னார்வு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகளிர் மற்றும் பொதுமக்கள் (மகளிர்), ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். இந்த பேரணியானது சேலம் கோரிமேடு அரசு பெண்கள் கலை கல்லூரி முன்பு துவங்கி அஸ்தம்பட்டி ரவுண்டானா, 5 ரோடு, 4 ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பிரபாத் சிக்னல், கே.எஸ் தியேட்டர் வழியாக சேலம் மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி.பா.விஜயகுமாரி இ.கா.ப., அவர்கள் தலைமையேற்றார்கள். சேலம் மாநகர துணை ஆணையாளர்கள் திருமதி.S.பிருந்தா இ.கா.ப., (வடக்கு), திரு.N.மதிவாணன் (தெற்கு) ஆகியோர்களும், சேலம் மாநகர கூடுதல் துணை ஆணயாளர் (ஆயுதப்படை) திரு.M.ரவிச்சந்திரன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.





