த
தேனி மாவட்டம் தேனி உட்கோட்டம் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டூரில் வசிக்கும் தங்கம் என்பவரின் மனைவி கார்த்திகை செல்வி (35) என்பவர் 5.8.2018 ஆம் தேதி காலை தேவாரம் அமராவதி நகரில் உள்ள தனது தங்கையின் தொலைபேசிக்கு பலமுறை தொடர்பு கொண்டு எடுக்காததால் மனுதாரர் கோட்டூரிலிருந்து தேவாரம் அமராவதி நகரில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு வெளிப்பக்கமாக பூட்டி இருந்ததாலும் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியதாலும் சந்தேகத்தின் பேரில் பூட்டியிருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தனது தங்கை இறந்த நிலையில் கிடந்துள்ளார் இது சம்பந்தமாக கார்த்திகை செல்வி (35) என்பவர் கடந்த 5.8.2018 ஆம் தேதி கொடுத்த புகாரியின் பேரில் தேவாரம் காவல் நிலைய குற்ற எண் 226/2018 பிரிவு 380.302 இதன்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது விசாரணையில் எதிரியான சடையாண்டி (43) இறந்த சரணமணி இருவருக்கும் கேரளாவுக்கு வேலைக்கு செல்லும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது அப்போது சரணமணியிடம் எதிரி சடையாண்டி புரோ நோட்டில் கையெழுத்து போட்டு கடன் வாங்கியுள்ளார் கடன் பெற்றுக்கொண்டு எதிரி திருப்பிக் கொடுக்காததால் எதிரிக்கு இறந்த நபரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக இரவு நேரத்தில் சரண்மணியின் வீட்டிற்குள் எதிரில் நுழைந்து சரண் மணியின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்து விட்டு சரணம் மணிக்கு சொந்தமான நகையை திருடி சங்கராபுரம் ஐசிஐசிஐ வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்றது தெரியவந்துள்ளது அதன் பின்னர் 7.8. 2018 ஆம் தேதி எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார் இவ்வழக்கின் இறுதி அறிக்கை 31.10.2018 அன்று தாக்கல் செய்யப்பட்டு மேற்படி வழக்கு விசாரணை தேனி மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மேற்படி எதிரி சடையாண்டி (43) என்பவர் தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி M. கோபிநாதன் MA.BL அவர்களால் 24.1.2024 ஆம் தேதி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 380 திசா வழக்கில் 7 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் அபராத தொகை ரூபாய் 5000 அபராதத்தை கட்ட தவறினால் 2 மாதம் கடும் காவல் சிறை தண்டனையும் 302 இதச வழக்கில் ஆயுள் தண்டனையும் அபராத தொகையாக ரூபாய் 5000 அபராதத்தை கட்டத்தவறினால் 2 மாதம் கடுங்காவல் சிறை தண்டணையும் விதித்து தீர்ப்பளித்தார்.மேலும்இவ்வழக்கில் திறன் பட வாதுரைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் சுகுமாரன். BA.BL அவர்களுக்கும் இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை செய்த முன்னாள் போடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்.பொறுப்பு தேவாரம் காவல் நிலையம் காயத்ரி அவர்களுக்கும் விசாரணை சிறப்பாக நடைபெற்ற அனைத்து ஆவணங்களையும் உரிய நேரத்தில் சமர்ப்பித்த தற்போதைய தேவாரம் காவல் நிலைய ஆய்வாளர் மாரிசாமி அவர்களுக்கும் மேலும் இந்த வழக்கில் சாட்சிகளை ஆஜர் படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட நீதிமன்ற காவலர் செந்தில்குமார் த. கா. 2007 அவர்களுக்கும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.சிவ பிரசாத் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்