தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சந்தனபுரம் கிராமத்தில் அடைக்கலம் என்பவர் ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்து ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டின் அருகே சற்று நேரம் கலப்பில் அமர்ந்திருந்தார் அப்போது அவ்வழியாக வந்த TN65 AB 7894 பதிவு எண் கொண்ட வாகனம் அடைக்கலம் என்பவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது விபத்துக்குள்ளானவரை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் மகன் பாண்டி என்பவர் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் புகாரியின் அடிப்படையில் ஜெமங்கலம் காவல் சார்பு ஆய்வாளர் பிரபா தலைமையில் தப்பி சென்ற வாகனத்தை துரித நடவடிக்கையால் 3 மணி நேரத்திற்குள் வாகனத்தை ஓட்டி சென்ற அஜித்கான் என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறனர்
