தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கட்டிடங்களுக்கான பூமி பூஜை மற்றும் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி 16வது வார்டு பகுதியில் ரூ.2.50 லட்சம் நிதி மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா மற்றும் கண்காணிப்பக அறை ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காணிப்பு கேமராக்களை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ் .சரவணகுமார் பயன்பாட்டிற்கு திறந்து, கண்காணிப்பு அறையை பார்வையிட்டார். இதேபோல், பெரியகுளம் நகராட்சி 21வது வார்டு பகுதியில் பொது நிதியிலிருந்து ரூ.2.75 லட்சம் நிதி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெண்களுக்கான நவீன கழிப்பறை கட்டிட கல்வெட்டை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பெரியகுளம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், பெரியகுளம் திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ், 16வது வார்டு உறுப்பினர் கிஷோர் பானு நூர் முகமது, 21 வது வார்டு கவுன்சிலர் சந்தானலட்சுமி, பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் மீனா, பெரியகுளம் நகராட்சி பொறியாளர் ரமேஷ், அரசு வழக்கறிஞர் சிவகுமார், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக், முஸ்லிம் லீக் நிர்வாகிஆலிம் அஹமது முஸ்தபா, காவல்துறையினர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட மஞ்சளாறு அணை பகுதியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டுவதற்கு பூமி பூஜை, தேவதானப்பட்டி பேரூராட்சி பள்ளிவாசல் அருகே ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பெரியகுளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எல்.எம்.பாண்டியன், தேவதானப்பட்டி பேரூராட்சி சேர்மன் முருகேஸ்வரி ராமையா, தேவதானப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர், தேவதானப்பட்டி திமுக பேரூர் கழக செயலாளர் திலகர் ராஜா, மற்றும் கழக நிர்வாகிகள், பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள், PKR கண்ஸ்டரக்ஷன் அரசு ஒப்பந்ததாரர் கலந்து கொண்டனர்.