தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் தனியார் மண்டபத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேனி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது
இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் நான் அண்ணாவை பார்க்கவில்லை பெரியாரைப் பார்க்கவில்லை மூத்த உறுப்பினர்கள் உங்கள் மூலமாக அண்ணாவையும் பெரியரையும் கலைஞரையும் பார்க்கிறேன் நீங்கள் தான் இந்த கட்சியின் உயிர் மூச்சு நீங்கள் இல்லையே இந்த திராவிட முன்னேற்றக் கழக கட்சியே இல்லை என புகழாரம் சூட்டினார்
இந்த விழாவில் மூத்த உறுப்பினர் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜா திமுக கழக நிர்வாகிகள் தொழிலாளர் கலந்து கொண்டனர்
அதைத்தொடர்ந்து கம்பத்தில் உள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைத்துவிட்டு சென்ற உதயநிதி ஸ்டாலின் வழிநெடுகிளும் தொண்டர்களை கையாசித்துக்கொண்டு சென்றார்..
இதனால் கம்பம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
உதயநிதி ஸ்டாலின் பேசியது பின்வரும் நான் இந்த தேனி மாவட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்னரே வந்து உள்ளேன் தேனி மாவட்டம் மிகவும் எனக்கு பிடித்தமான மாவட்டம்
அமைச்சரான பிறகு நான் வருகை தரும் இந்த மாவட்டம் மூத்த உறுப்பினர்களை காண வந்துள்ளேன்
மூத்த உறுப்பினர் உழைப்பு போற்றப்படுகிறது எந்த ஒரு கட்சியிலும் மூத்த உறுப்பினருக்கான பாராட்டுதல் இல்லை ஆனால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மட்டுமே மூத்த உறுப்பினருக்கு பாராட்டு வழங்கப்பட்டு வருகிறது
தொடர்ந்து மூத்த உறுப்பினர் இல்லையே இந்த திராவிட முன்னேற்றக் கழக கட்சி இல்லை இந்த மூத்த உறுப்பினர்கள் அண்ணாவை பார்த்தவர்கள் பெரியாரைப் பார்த்தவர்கள் கலைஞரை பார்த்தவர்கள் அவர்களுடன் போராடி சிறை சென்றவர்கள் இருந்தபோதிலும் நான் அண்ணாவை பார்க்கவில்லை பெரியாரைப் பார்க்கவில்லை உங்கள் மூலமாக அண்ணாவையும் பெரியாரையும் பார்க்கிறேன்
திராவிட முன்னேற்றக் கழக கட்சி நூறாண்டு காலம் இன்னும் தொடரும் மூத்த உறுப்பினர்கள் நீங்கள் இருக்கும் வரை எவராலும் எ திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியையும் கட்சியையும் அழிக்க முடியாது என பேசினார்