தேனி மாவட்டம் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 8.1.2024 நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 377 கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா. பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி. புதிய வீட்டுமனை பட்டா வேண்டி. வேலை வாய்ப்பு வேண்டி. மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 377 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ஷீலா (நிலம்).முஹம்மது அலி ஜின்னா (கணக்குகள்).மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.