முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேற்று (29.6.2024) தலைமைச் செயலகத்தில், ஆண் மற்றும் பெண் காவலர்கள் சந்தித்து, காவல்துறை மானியக் கோரிக்கையில், காவலர்களுக்கான புதிய குடியிருப்புகள் கட்டுதல், பணியின்போது உயிர்இழப்போ / உடல் ஊனமோ / காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகையை உயர்த்தி வழங்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். உடன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ.அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உள்ளனர்.
