இன்று 28.08.2024 இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் தலைமையில் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்களில் நீதிமன்ற அலுவலில் ஈடுபடும் காவல் துறையினர்க்கான அறிவுரை கூட்டம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த சிறப்பு கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கொலை, கொள்ளை போன்ற முக்கிய வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும்,நீதிமன்ற நிலுவையிலுள்ள வழக்குகளை குறித்தும், வழக்கு கோப்புகளை காலதாமதமின்றி நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு சென்று சாட்சிகளை காலதாமதமின்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்குகளை விரைவாக முடிக்கவும், பிடி கட்டளைகள் நிலுவையில் உள்ள வழக்குகளில் எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து எதிரிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுதர விரைவாகவும் துரிதமாகவும் செயல்பட வேண்டும் என்றும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு கலந்தாய்வுக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CCW), துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.திருமால் (ராணிப்பேட்டை உட்கோட்டம்) திரு.ரமேஷ் ராஜ் (DCB), திரு.ராமச்சந்திரன்(DCRB), செல்வி.சந்திரலேகா (பயிற்சி) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
