கள்ளக்குறிச்சி தியாகதுருகம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்
2 பேர் பலியாகியுள்ளனர். சு.ஒகையூர் சுப்பிரமணியபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்
தொண்ட விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாடந்துறையில் இரிடியம் மோசடி, ஆள் கடத்தலில் ஈடுபட்ட
9 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாலசுப்பிரமணி என்பவர் தன்னிடம்
இரிடியம் இருப்பதாக கூறி கேரளாவைச் சேர்ந்தவர்களிடம் ரூ.5 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார்.
மோசடி செய்த பாலசுப்ரமணி மற்றும் அவரது மகனை கேரளாவை சேர்ந்த 7பேர் கடத்தியுள்ளனர்.
கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் மற்றும் இரிடியம் இருப்பதாக மோசடி செய்த தந்தை, மகன் உட்பட
9 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் துணை வட்டாட்சியர் பிரேம்குமார் உள்ளிட்டோர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர்
கைது செய்யப்பட்டுள்ளனர். அரவிந்த், குமார், வெங்கடேஷ் உட்பட 4 பேர் துணை வட்டாட்சியர்
தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர். வங்கிக் கடனை செலுத்தாததற்காக சொத்தை ஜப்தி
செய்ய முயன்ற துணை வட்டாட்சியர் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சேலம் – கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு
பேருந்தில் தீ பற்றியது. பேருந்தின் முன் பகுதியில் ரேடியேட்டரில் திடீரென தீ பற்றியுள்ளது. இதனால்
சுதாரித்து கொண்ட ஓட்டுநர் பேருந்தை அந்த இடத்திலேயே ஓரமாக நிறுத்தினார். பின்னர் ஓட்டுநர்
மற்றும் நடத்துனர் பேருந்தில் உள்ள பயணிகளிடம் தகவலை கூறி அவர்களின் உடமைகளுடன்
உடனடியாக வெளியேற்றினர். இதனால் அதிர்ஷ்டாவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அகரம் தடுப்பணை நீரில் மூழ்கி சிறுவன்
உதயகுமார்(16) உயிரிழந்தார். காரிமங்கலத்தை சேர்ந்த சிறுவன் உதயகுமார் நண்பர்களுடன்
குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சென்னை: துர்கா பூஜையை ஒட்டி சென்னையின் பல இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட
சிலைகள், சென்னை பட்டினப்பாக்கம் கடற்பகுதியில் கரைக்கப்பட்டன. பூஜை செய்தும், பாட்டு
பாடியும் சிலைகளை பக்தர்கள் கரைத்தனர். மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் போலீசார்
போதிய ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். விநாயகர் சதூர்த்தி நாளை போன்றே
பட்டினப்பாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் திருவள்ளூர்
மேற்கு ஒன்றியம் திருவள்ளூர் மத்திய மாவட்டம் புட்லூர் ஊராட்சி ஊராட்சி பாக முகவர்கள் BL2
மற்றும் பாக அளவிலான குழு BLC உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் விஜயநகர்
பகுதியில் திருவள்ளூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் கும்பகோணம் அருகே கறிக்குளத்தில் விஜயதசமி ஆயுத பூஜை முன்னிட்டு வீடு
சுத்தம் செய்யும் போது மின்சாரம் தாக்கி ஆசாரி உயிரிழப்பு. வீட்டில் உள்ள பேனை சுத்தம்
செய்த போது, மின்சாரம் தாக்கி செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார்.தகவலயறிந்த
சம்பவத்திற்கு விரைந்து வந்த திருவிடைமருதூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி
பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி பகுதியைச் சார்ந்தவர் மனோகரன்(44) இவருக்கு
திருமணம் முடிந்து ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தோட்டத்திற்கு காலையில்
சென்று விவசாய பணி மேற்கொள்ளும்போது மின்சார வயர் அறுந்து அந்த முள்வேளி
மீது கை வைத்தவுடன் மின்சாரம் மனோகரன் மீது தாக்கி தூக்கி எறிந்து அங்கேயே
உயிரிழந்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு
அனுப்பிவைத்தனர். போலிசார் விசாரனை
செங்கல்பட்டு தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பும்
மக்கள். சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்; 5 கி.மீ
தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன