75-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று (26.11.2024) தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஷ்வரன்.,B.Com.,BL. அவர்கள் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உள்ள
இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை (இறையாண்மையும், சமநலச்சமுதாயமும், சமயச்சார்பின்மையும், மக்களாட்சிமுறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும்),
அதன் குடிமக்கள் அனைவரும்
சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை,
சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும்,
அவர்கள் அனைவரிடையேயும்
தனி மனிதனின் மாண்பு, (நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு) இவற்றை உறுதிப்படுத்தும் உடன்பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய்,
இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.
என உறுதி ஏற்றுக்கொண்டனர்.