தேனி மாவட்டம் சின்னமனூரில் நாட்டைக் காப்போம் குடிமைச் சமூகங்கள் முன்னெடுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புப் பரப்புரை கலைப்பயணம் மற்றும் மாநாடு. இந்தியாவைக் காக்க எழுவோம் என்று அக்டோபர் 2 முதல் 16 தேதி வரை நடைபெறுகிறது அதை தொடர்ந்து 13.10.2023 சின்னமனூர் தேரடியில் கலை நிகழ்ச்சியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியானதுதிமுக நகரச் செயலாளர் முத்துக்குமார் துவங்கி வைத்தார் சிபிஎம் நகர செயலாளர். மணிகண்டன் தலைமையில் மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம் முன்னிலை வைத்தார் இதில் கலை நிகழ்ச்சியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க அவைத் தலைவர் மனோகரன் திமுக பிரதிநிதி கூத்தப்பெருமாள் காங்கிரஸ் கட்சியில் 3 வார்டு நகர் மன்ற உறுப்பினர் நைனார் முகம்மது சி.பி.எம் மாவட்ட பிரதிநிதி வெங்டேசன் எழல் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.