உத்தமபாளையம் நேற்று முன்தினம் ரோந்து பணிக்கு ஈடுபட்டிருந்தனர்.அப்போது பழைய பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படி கார் ஒன்று நின்றிருந்தது.அந்தக் காரில் உள்ள நபரிடம் விசாரித்த பொழுது 2சூட்கேஸ் இருந்தது ஒரு சூட்கேசில் துணிகளும் மற்றொரு சூட்கேசியில் எலுமிச்சம்பழம் இருந்தது. காரில் இருந்த 3 நபர்களையும் விசாரணை செய்த பொழுது. காரில் உடல் உறுப்பு சம்பந்தமான பொருட்கள் எடுத்தனர்.அந்த உடல் உறுப்புகள் மனித உடல் உறுப்புகளா? இல்ல விலங்குகளுடைதா? என்று பரிசோதனை அனுப்பப்பட்டுள்ளது.அது சம்பந்தப்பட்ட அந்த காரில் இருந்த நபர்களை அழைத்துச் சென்ற காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். இது சம்பந்தப்பட்ட நபர்களை உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் சிலை மணி தலைமையில் தனி படை அமைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.
