ஈரோடுமாவட்டம் , கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் அரசு மேனிலைப்பள்ளியில் விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிகளிடையே சிறப்புரை நிகழ்த்தி பாடபுத்தகங்களை வழங்கினார்.
இதனையடுத்து கடந்த மாதம் வெளியான 10,11,12 ம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் +2 பொதுதேர்வில் ஈரோடுமாவட்டத்தில் அரசு பள்ளிகளிலேயே 600க்கு 585 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த ரிதன்யா, 600க்கு 578 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்த மோகனபிரியா மற்றும் மூன்றாமிடம் பிடித்த தாரணி ஆகிய மூன்று மாணவிகளுக்கும் ஊக்கபடுத்திய பெற்றோர்களுக்கும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பாராட்டி பதக்கங்கள் அணிவித்து பரிசுகளை வழங்கினார்.
இதேபோல் 10, 11ம் வகுப்பு பொதுதேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி பெற்றோர்களை கெளரவுபடுத்தினர் நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் முதலிடம் பிடத்த மாணவி ரிதன்யா பேசுகையில் அரசு பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது தான் இவ்வளவு மதிப்பெண் பெற ஊக்கப்படுத்தியது பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் தான் காரணம் மேலும் கல்லூரி படிப்பை சிறப்பாக முடித்து நீதிபதி ஆவதே தனது இலட்சியம் கண்டிப்பாக நீதிபதி ஆகி மீண்டும் நமது பள்ளிக்கு வருகை தந்து மாணவ மாணவிகளையும் ஆசிரியர்களையும் சந்திப்பேன் என பேசியது பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் நன்கு படித்து பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் நமது பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியரின் பெற்றோர்களை கெளரப்படுத்தியதற்கு பள்ளி ஆசிரியர் ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவியருக்கும் நன்றி தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் கோபிசெட்டிபாளையம் ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், மாவட்ட கவுன்சிலர் சிவகாமிதங்கவேல், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேணுகாதேவி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் காளியண்ணன், ஒன்றியதுணை செயலாளர் அமராவதி, மாணவரணி ப்ரவின், பிச்சாண்டம்பாளையம் சின்னப்பன், ஸ்ரீதர், செந்தில், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காவலர் ரிப்போர்ட் செய்திகளுக்காக
ஈரோடு மாவட்ட செய்தியாளர்
சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.