சின்னமனூர் ஆகஸ்ட் 2 தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்துள்ள ஓடைப்பட்டியில் 2023- 24 ஆம் கல்வியாண்டு பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மாணவ மாணவியர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டியை வழங்கி உரையாற்றினார்.மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் அறிவுரைகளையும்,நெகிழி பயன்பாடுகளை பள்ளிக்கூடங்களிலும் வீடுகளிலும் பொது இடங்களிலும் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும் என்றும் அது பயன்படுத்துவதால் ஏற்படும் நில மாசு குறித்தும் விரிவாக எடுத்து வைத்தார் மேலும் மாணவ மாணவியர்கள் உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும் என்றும் அனைத்து துறைகளிலும் கவனம் எடுத்துலட்சியத்துடன் செயலாற்ற வேண்டும் என்றும் உரையாற்றினார் .
இந்நிகழ்ச்சியில் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், சின்னமனூர்ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிவேதா அண்ணாதுரை, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி, ஓடைப்பட்டி பேரூராட்சி தலைவர் தனுஷ்கோடி, துணைத்தலைவர் குமரேசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் சசிகலா , மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபாண்மை அலுவலர் இந்துமதி உட்பட பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு கொண்டனர் .
பட விளக்கம்: ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டியை மாவட்ட ஆட்சியர் விஜீவனா வழங்கினார்.