மதுரை மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வி.ஷோபனா அவர்களின் உத்தரவின்படி கடந்த 18 ம் தேதி மாலை 5 மணியளவில் மதிச்சியம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.சுரேஷ், தலைமை காவலர் பூவலிங்கம், மற்றும் ராஜ்குமார் ஆகியோர் அண்ணாநகர் ஆவின் சிக்னல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயம் வேகமாக வந்த ஆட்டோ ஒன்றை சந்தேகத்தின் பேரில் காவலர்கள் நிறுத்தினர், போலிசாரை கண்டதும் ஆட்டோவில் இருந்த நபர் தப்பி ஒடினார். உடனே சுதாரித்து கொண்ட காவலர்கள் அவரை விரட்டுபிடித்தது ஆட்டோவை சோதனை இட்டதில் அதில் சுமார் 2 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது உடனே போக்குவரத்து போலிசார் பிடிபட்ட நபரையும் கைபற்றப்பட்ட கஞ்சாவையும் அண்ணாநகர் காவல் நிலையத்தில் (சட்டம் ஒழுங்கு) ஒப்படைத்தனர்.
அண்ணாநகர் சட்டம் ஒழுங்கு போலிசார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்ட நிருபர் அருள் ஜோதி