தமிழ்நாட்டில் இனி அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள், பொதுப்பணித்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆகியவை மூலம் பணியில் சேர உள்ளவர்களுக்கு கட்டாயம் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
அதன்பின் அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவித்து உள்ளது. இனி பணியில் வருபவர்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக முழுமையான பின்னணி சரிபார்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக போலீசார் அறிவித்து உள்ளனர். இதில் போலீசார் ஒருவரை பற்றி நெகட்டிவ் ரிப்போர்ட் அளித்தால் அவர்களை பற்றி ஆட்சியர் அலுவலகம் சோதனை செய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அருள்ஜோதி, மதுரை மாவட்ட நிருபர்