காந்தி நகர்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. நேற்றுதான் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல்-1ன் மேற்கூரை இடிந்து விழுந்திருந்தது. இதில், இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று அதிகாலை வரை பெய்த மழை காரணமாக விமான நிலையத்தின் டெர்மினல் 1ன் மேற்கூரை இடிந்த விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், பயணிகளுக்காக காத்திருந்த கால் டாக்சி கார்கள் அப்படியே அப்பளம் போல நொறுங்கின. காருக்குள் இருந்த ஓட்டுநர்களும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தீயனைப்புத்துறை தெரிவித்திருக்கிறது. விபத்து நடந்த இடத்தை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதற்கிடையில் விபத்துக்குள்ளான டெர்மினல் 1 பகுதியை கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடிதான் திறந்து வைத்தார் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன. கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் விரிவாக்கப்பட்ட பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்ததாக தி இந்து உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சியனர் பிரதமர் மீது விமர்சனங்களை அடுக்கியிருந்தனர்.Rea