கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி சாவு: கிராம மக்கள் சாலை மறியல்
கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ம், அருகே உள்ளது மகாராஜகடை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாம்பசிவம் (55) என்பவரை, ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தாக்கியது.இதில் பலத்த காயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
தகவல் அறிந்த காவல்துறையினர், வனத்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். கடந்த சில நாள்களாக இந்தப் பகுதியில் காட்டு யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தோம், நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.