மருதுபாண்டியர்களின் 222-வது நினைவு தினத்தை முன்னிட்டு,
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திருப்பத்தூரில் அமைந்துள்ள
மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் அன்னார்களின் திருவுருவச்சிலைகள் மற்றும் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள அன்னார்களின் நினைவுத்தூண்ஆகியவைகளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின்
சார்பில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபத்தில் இன்று (24.10.2023)மருதுபாண்டியர்களின் 222-வது நினைவு தின விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி.மூர்த்தி அவர்கள் ஆகிய அமைச்சர் பெருமக்கள்,மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார்கள்.முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் மருதுபாண்டியர்களின் நினைவு மண்டப வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் அவர்கள், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.மாங்குடி அவர்கள், சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பா.க.அர்விந்த்,இ.கா.ப., அவர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர்களும் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார்கள்.அதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவுத்தூணிற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்; உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில்
மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வ.மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.சோ.பால்துரை, திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் திருமதி கோகிலாராணி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இரா.சண்முகசுந்தரம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.ராஜா, திருப்பத்தூர் வட்டாட்சியர் திரு.வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலர்
திரு.தனுஷ்கோடி, அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் மருதுபாண்டியர்களின் வாரிசுதாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.