துபாய் 24H கார் ரேஸில் போர்ஷே 992 கப் கார் பிரிவில் (எண் 901) நடிகர் அஜித்குமாரின் அணி 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. அவரது அணி 24 மணி நேரத்தில் 567 லேப்களை கடந்து வெற்றி வாகை சூடியது. அஜித்குமாரின் இந்த வெற்றிக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் மாதவன், அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். அதேபோல், இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் ‘X’ தளத்தில் தங்களது வாழ்த்துகளை கூறியுள்ளனர்.