காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு கன்னட அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கூடாது எனக்கூறியும் பெங்களூரு நகரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் மாநில தலைவர் மஞ்சுநாத் தலைமையில் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து ஊர்வலமாக எல்லை பகுதிக்கு வந்த கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் தமிழகத்திற்கு எதிராகவும், தண்ணீர் திறக்க உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார்
