கிருஷ்ணகிரி PSV கல்வி குழுமம் சார்பில் பர்கூர் காவல்துறையோடு இணைந்து துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி 26.6.2024 அன்று பர்கூரில் நடைபெற்றது.
இப்பேரணியை PSV பொறியியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் P.லாரன்ஸ் தொடங்கி வைத்தார்.
மேலும் காவல் துணை கண்காணிப்பாளர் பிரித்விராஜ் சவுகான், காவல் ஆய்வாளர் வளர்மதி, NCC அலுவலர் அருண்குமார், YRC அலுவலர் வெற்றி வேலன், தேசிய மாணவர் படை NCC மற்றும் YRC மாணவர்கள் பங்கேற்று பொதுமக்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



