காவிரி நீரை கேட்டு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றிருப்பது சரியானதல்ல.
கர்நாடக விவசாயிகளுக்கு மழை குறைவு காரணமாக பயிரிட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம்.
எங்களின் குடிநீர் மற்றும் குறைந்தபட்ச விவசாய தேவைக்கான தண்ணீரை வைத்துக்கொண்டு, மீதமுள்ள நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிடுவதில் எந்த பிரச்னையும் இல்லை – கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.
