சேலம் மாநகரம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்கெட் அருகில் சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த திருமதி.சித்ரா என்பவர் தவற விட்ட 4 1/2 பவுன் தங்க நகையை சேலம் டவுன் பகுதியை சேர்ந்த திரு.சாகுல் மற்றும் திரு.அசரப் ஆகியோர் எடுத்து நல்லமுறையில் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்கள் ஒப்படைத்த நகையானது உரிமையாளர் திருமதி.சித்ரா வசம் இன்று 21.02.2024ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. நகையை எடுத்து நல்லமுறையில் ஒப்படைத்த திரு.சாகுல் மற்றும் திரு.அசரப் ஆகியோரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி.பா.விஜயகுமாரி.இ.கா.ப. அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார்.


