சேரன்மகாதேவி கவின் கலைக்கழகம் சார்பில் சார்ஆட்சியர் வளாகத்தில் வைத்து மாபெரும் ஓவியக்கண்காட்சி சார் ஆட்சியர் திரு. அர்பித் ஜெயின், இ.ஆப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்வோவியக் கண்காட்சியில் சேரன்மகாதேவி வட்டாட்சியர் வின்சென்ட், வட்டாட்சியர் செல்வம், காவல் ஆய்வாளர் தர்மராஜ், மின் இணைப்பு பொறியாளர் திரு கைலாசமூர்த்தி, தீயணைப்பு துறை அதிகாரி பலவேசம், மருத்துவ அலுவலர் அமுதா, சமூக ஆர்வலர் ஆப்த மித்ரா, பேரிடர் மேலாண்மை முதனிலை மேற்பார்வையாளர் நெயினா முகம்மது மலுக்காமலி சைலா கேத்தரின், ஷேசாயி பேப்பர் மில் அதிகாரிகள், அன்னை m.cent முக்கூடல் ஞானதுரை மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவை சேரன்மகாதேவி கவின் கலைக்கழகம் ஓவிய ஆசிரியர்கள் சிவராமகிருஷ்ணன், பத்தமடை மாரியப்பன், வீராசாமி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.