விருதுநகர் மாவட்டத்தில், வீட்டுச்செலவுக்கு வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்று மது குடித்த தன்னுடைய தந்தையை, வெட்டிக் கொலைசெய்த 17 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்த 4,000 ரூபாயை எடுத்துச் சென்று கனிச்செல்வம் மதுக்குடித்து செலவழித்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அவரின் 17 வயது மகன், `எதற்காக வீட்டிலிருந்து பணத்தை எடுத்து மதுக்குடிக்கச் செலவு செய்தீர்கள்’ எனக் கேட்டு சத்தம் போட்டிருக்கிறார். இதனால் தந்தை-மகன் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டிருக்கிறது
இந்த `பகீர்’ சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தாலுகாவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் கனிச்செல்வம். இவருக்கு ஒரு மகளும், 17 வயதுக்குட்பட்ட ஒரு மகனும் இருக்கின்றனர்