🔹🔸 தஞ்சாவூர் அருகே முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ, தன்னை பணி செய்யவிடாமல் மிரட்டுவதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தன்னை வேறு இடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர், கூடுதல் கலெக்டரிடம் மனு அளித்திருக்கும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!..
🔹🔸தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள திருவோணம் யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் அறிவானந்தம். இவர் சமீபத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்திடம், புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.
🔹🔸 அதில், `திருவோணம் தி.மு.க வடக்கு ஒன்றியச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான மகேஷ் கிருஷ்ணசாமி என்னை பணி செய்யவிடாமலும், தனக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டுமே ஒப்பந்தப் பணிகளை வழங்க வேண்டும் என மிரட்டுகிறார்திருவோணம் யூனியனில் வளர்ச்சிப் பணிகள் காலதாமதமாக நடப்பதற்கு முன்னாள் எம்.எல்.ஏ மகேஷ் கிருஷ்ணசாமிதான் காரணம்.
🔹🔸 இவர் தொடர்ந்து மிரட்டல் விடும் நிலையில், திருவோணம் யூனியனில் பணிபுரிவதற்கு எனக்கு அச்சமாக உள்ளது.
🔹🔸எந்த நேரத்திலும் அவரின் ஆதரவாளர்களை வைத்து என்மீது தாக்குதல் நடத்துவார் என்ற நிலையில், எனக்கு உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே வேறு யூனியனுக்கு என்னை பணியிட மாறுதல் செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
🔹🔸ஆளுங்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-மீது அரசு அதிகாரி ஒருவர் புகார் கொடுத்திருப்பது தஞ்சாவூர் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
🔹🔸 இது குறித்து அறிவானந்தத்திடம் பேசினோம், “முன்னாள் எம்.எல்.ஏ என்னை போனில் மிரட்டினார்.
News update நடந்த சம்பவத்தை நான் எனது மனுவில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன். கூடுதல் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார்” என்றார். இது குறித்து மகேஷ் கிருஷ்ணசாமி தரப்பில் கேட்டபோது, “சேர்மன் இருக்கிறார் அவரை கலந்தாலோசித்து, எதுவாக இருந்தாலும் செய்ய வேண்டும் எனச் சொல்லியிருந்தேன். மிரட்டல் விடுக்கவில்லை” என்றார்.