காரைக்குடி கழனிவாசல்
வார சந்தையில் வியாபாரிகள்
பயன்படுத்தும் தராசுகள் சோதனை-அரசு முத்திரை இல்லாத தராசு, எடைகற்கள் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசலில் வியாழக்கிழமையில் வாரச்சந்தை நடைபெறுகிறது இதில் காரைக்குடி மற்றும் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வார சந்தையில் காய்கறிகள்,பழங்கள், மீன்கள் உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி செல்கின்றனர், பொதுமக்களுக்கு சரியான எடை அளவில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சிவகங்கை மாவட்ட
மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் அமலாக்கம் முத்து, துணை ஆய்வாளர் வேலாயுதம், காரைக்குடி உதவி ஆய்வாளர் வசந்தி,திருப்பத்தூர் உதவி ஆய்வாளர் தினதயாளன் ஆகியோர் வார சந்தையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர், அப்போது விவசாயிகள்,வியாபாரிகள் பயன்படுத்தும் எடை கற்கள் முத்திரையிடப்பட்டுள்ளதா, தராசு கற்கள் எடை சரியாக உள்ளதா, தரமான அளவைகள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனை செய்தனர், அரசு முத்திரை இல்லாத தராசுகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்,இதில் 15 தராசுகள், 17 எடை கற்கள் கைப்பற்றப்பட்டது, விவசாயிகள், வியாபாரிகள் கால அவகாசம் முடிந்த தராசுகளை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று முறையாக அரசு முத்திரை பெற்று விற்பனைக்கு தராசுகளை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
