ஓசூர் அரசு மருத்துவமனையை கண்டித்து இன்று மாலை ஓசூர் இராம் நகரில் ஓசூர் மாநகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தலைவர்கள் மணிகண்டன் , ரமேஷ் கண்ணன் , நாகேந்திர , தங்கராஜ் முன்னிலை வகித்தனர் , சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் M.நாகராஜ் கலந்துகொண்டார் , ஆர்ப்பாட்டத்தில் ஓசூர் அரசு மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும் பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்ககோரியும் , நோயாளிகளிடம் பாரபட்சமில்லாமல் மருத்துவம் பார்க்க வேண்டியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது , நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், ஸ்ரீநிவாசன் ,முருகன் ,நாகராஜ் ஸ்ரீனிவாச ரெட்டி ,பிரவீன்குமார் ,ராஜசேகர் மாநில நிர்வாகிகள் இராமலிங்கம் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
